இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் உள்ள அண்ணா திரையரங்கில் பார்க்கிங் திரைப்படத்தை திரைப்பட நடிகர் ஹரிஸ் கல்யாண் மற்றும் இயக்குனர் ராம் உள்ளிட்டோர் இணைந்து ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வரவேற்பு மற்றும் கருத்துக்கள் குறித்து கேட்டறிந்தனர்.
இதன் பின்னர் நடிகர் ஹரிஸ் கல்யாண் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- பார்க்கிங் திரைப்படம் வெற்றிகரமாக திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க உதவியாக இருந்த ஊடகங்கள், சமூக வலைதள ஊடகங்களுக்கு நன்றி. மழை பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நடிகர்கள் இயன்ற வரை உதவி செய்து வருகிறார்கள். சில வளர்ந்து வரும் நடிகர்கள் செய்யும் உதவிகள் வெளியே தெரிவதில்லை. ஆனால் சிலர் செய்யும் உதவிகள் வெளியே தெரிகிறது.
திரைப்படத்தில் போதை பொருட்கள் தொடர்பான காட்சி இயக்குநர் காட்சிக்கு தேவை என்ற அடிப்படையில் வைக்கப்படுகிறது. அதைத் தாண்டி மக்களுக்கு நல்ல கருத்துக்கள் சொல்லுகிறோம். வேண்டியதை எடுத்துக்கொண்டு தேவையில்லாததை விட்டு விடலாம். திரைப்படத்தில் நல்லது இருக்கும் கெட்டது இருக்கும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது அவருடைய தனிப்பட்ட விருப்பம் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் இவர்கள் தான் வரவேண்டும். வரக்கூடாது என்று சொல்ல முடியாது.
அடுத்தடுத்து திரைப்படம் வாய்ப்புகள் உள்ளது. மழை வெள்ள பாதிப்பு முதல்வர் நிவாரண நிதிக்காக எனது சார்பில் ஒரு லட்சம் மற்றும் பார்க்கிங் திரைப்பட குழு சார்பாக 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
0 coment rios: