ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் பெருந்துறை போலீசார் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக தேங்காய் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், தேங்காய்களுக்கிடையில் சாக்கு மூட்டையில் குட்காவை வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரியில் வந்த இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் இருவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுலைமான் (48), சர்புதீர் (46) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, நடத்திய விசாரணையில், இவர்கள் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு 3 டன் குட்காவை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்தி வந்த 3 டன் குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
0 coment rios: