ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு 11ம் கட்டமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட மக்களுக்கு,கடந்த 6ம் தேதி முதல் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பிரட், குடிநீர், பிஸ்கட், போர்வைகள், அரிசி, கோதுமை மாவு, ஆயில், பால் பவுடர், மெழுகுவர்த்தி, சோப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று (சனிக்கிழமை) வரை 11ம் கட்டமாக 1,008 குடிநீர் பாட்டில்கள், 2,000 பிரட் பாக்கெட்கள், 450 கிலோ அரிசி, 540 போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் இதுவரை சுமார் ரூ.79 லட்சத்து 97 ஆயிரத்து 574 மதிப்பீட்டில் 1,35,666 அனுப்பி எண்ணிக்கையிலான பல்வேறு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: