ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழில் பேட்டையில் வெளியேற்று ஆலை கழிவுகளை தடுப்பதற்காக கடந்த நான்கு மாதங்களாக சுற்று வட்டார கிராம பொதுமக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பெருந்துறை சிப்காட்டில் இயங்கி வரும் ஒரு சாயத்தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் சாயக்கழிவு நீர் வெளியேறுவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டுபிடித்தனர்.
அந்தக் கழிவு நீரை பரிசோதனை செய்ததில் உப்புத்தன்மை 1200 டிடிஎஸ் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சாயத்தொழிற்சாலை மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி திட்ட அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திட்ட அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாயத்தொழிற்சாலை கான்கிரீட் அமைத்து, எட்டடிக்கும் கீழே ஒரு மீட்டர் அளவுள்ள குழாயை பதித்து 50 ஹெச்பி மோட்டாரை வைத்து எவ்வளவு கழிவு நீரை வெளியேற்ற முடியுமா அந்த அளவிற்கு வெளியேற்றி வந்துள்ளது. இதனை பொதுமக்களாகிய நாங்கள் கண்டுபிடித்து சிப்காட் திட்ட அலுவலகத்திற்கும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கும் புகார் அளித்துள்ளோம் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்
0 coment rios: