ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள குன்றி மலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை காட்டு யானைகள் நாசம் செய்ததாக, சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு பெற சான்றிதழ் கேட்டு, சத்தியமங்கலம் வேளாண்மைத் துறை அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
ஆனால், பயிர் சேத சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த விவசாயிடம், வேளாண் துறை உதவி இயக்குநர் வேலுச்சாமி என்பவர் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், அலுவலக செலவுக்காக 2 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் எனவும், இழப்பீட்டுத் தொகை 22 ஆயிரம் என்பதை 24 ஆயிரமாக உயர்த்தி தருவதாகவும் அதிகாரி பேசியிருந்தார்.
இதையடுத்து, பயிா் இழப்பீடு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட உதவி இயக்குநா் வேலுச்சாமியை பணியிடை நீக்கம் செய்து சென்னை வேளாண்மைத் துறை ஆணையா் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளாா்.
0 coment rios: