கீழ்பவானி பாசன கால்வாயில், கான்கீரிட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வரும் 14ம் தேதி நடக்கவுள்ள நடைபயணத்துக்கு அனுமதி கோரி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க விவசாயிகள் கொ.ம.தே.க., மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி தலைமையில் ஈரோடு எஸ்பியிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, கீழ்பவானி பாசன கால்வாயில், கான்கீரிட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வரும் 14ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திண்டலில் இருந்து ஈரோடு ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளோம். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன் கலந்து கொள்கிறார். நடைபயணத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
அவருடன் கொ.ம.தே.க., ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட செயலாளர் பரமசிவம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு நிர்வாகிகள் வழக்கறிஞர் குமாரசாமி, நவீனா குமார், ஈரோடு தெற்கு ஒன்றிய செயலாளர் கொளந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: