ஈரோடு, பெரியார் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சங்கரன் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், மணிபாரதி, ஹரி தாஸ், கதிர்வேல், அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் ஜெயராமன், ஜெகநாதன், மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி குப்புசாமி, காவல் துறை ஓய்வூதியர் நல அமைப்பு நிர்வாகிகள் செல்லமுத்து, அப்துல்பாஷீத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், கருத்தரங்கில், ஓய்வூதியம் என்பது நன்கொடையோ, கருணைத் தொகையோ அல்ல. அது ஒரு கொடுக்கப்படாத சம்பளம். அரசியல் சட்டம் ஷரத்துகள் 309 மற்றும் 148(5)-ன்படி, உறுதியுடன் அளிக்கப்பட வேண்டிய உரிமை என வலியுறுத்தப்பட்டது. முடிவில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல் தலைவர் துரை பாண்டியன் நிறைவுரையாற்றினார்.
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட பொருளாளர் லோகசாமி நன்றி கூறினார். கருத்தரங்கில் திரளான அரசு ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: