ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியரால் படைவீரர் கொடிநாள் நிதிவசூல் பணி துவக்கி வைக்கப்படுகிறது. அதன்படி, வியாழக்கிழமை (இன்று) ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உண்டியலில் நிதி செலுத்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூலினை தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதிவசூல் இலக்காக ரூ. 1 கோடியே 56 லட்சத்து 90 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ. 1 கோடியே 53 லட்சத்து 90 ஆயிரத்து 450 அதாவது 98.9 சதவீதம் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டை போல, இந்த வருடமும் அதிக அளவில் கொடிநாள் நிதி வசூல் எய்திட பொதுமக்கள், அரசு அலுவலா்கள், பணியாளா்கள், மாணவ, மாணவிகள் ஆகியோா் நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என்றாா்.
0 coment rios: