செவ்வாய், 12 டிசம்பர், 2023

தாளவாடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கை அடக்கம் செய்து வழிபட்ட தூய்மை பணியாளர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் குரங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இந்த நிலையில், தொட்டகாஜனூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு உள்ள மின் கம்பத்தில் ஏறிய குரங்கு மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது.

இதுகுறித்து தாளவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய பணியாளர், மின் கம்பத்தில் ஏறி இறந்த குரங்கின் உடலை மீட்டார். இதையடுத்து ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் முருகன் குரங்கின் உடலை புதைத்து அதன் மீது மஞ்சள் தூவி, மாலை அணிவித்து சடங்குகள் செய்து வழிபட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: