ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள நகலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரசாமி (44). இவர் தமிழ்நாடு காவல்துறையில் 2003-ல் இருந்து காவலராக பணி புரிந்து வந்தார். ஈரோடு சிறப்பு பிரிவு உளவு மற்றும் பாதுகாப்பு பிரிவில், தலைமை காவலராக கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாரசாமி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, மாரசாமியின் உடலை அந்தியூர் போலீசார் கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், உடற்கூறு ஆய்வு முடித்து அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: