செவ்வாய், 30 ஜனவரி, 2024

இரண்டாம் நிலை காவலருக்கு உடற்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: ஈரோடு ஆட்சியர் தகவல்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (டிஎன்யூஎஸ்ஆர்பி) இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக உடல் திறன் தேர்விற்கு தயாராக வேண்டியுள்ளது.

இவர்களுக்கு உதவும் வகையில் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள செங்குந்தர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை (31ம் தேதி) காலை 10 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் 94990 55943, 98424 04508 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் தங்களது விவரங்களை https://forms.gle/SokRKmwTSBshhzAw9 கூகுள் லிங்கில் தங்களது விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டும். எனவே, இந்த பயிற்சி வகுப்பில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் பங்கேற்று பயன் பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது ‌.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: