செவ்வாய், 30 ஜனவரி, 2024

காந்தியடிகள் நினைவு தினம்: ஈரோட்டில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் தீண்டாமை ஒழிப்பு ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன், குடிமகள் ஆகிய நான். நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.

அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும், இதனால் உளமார உறுதியளிக்கிறேன் என்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் வாசிக்க, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

முன்னதாக, இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: