ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பாஜக மகளிர் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில், பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி, மாநில, மாவட்ட, நகர ஒன்றிய பேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில், பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மத்திய அரசின் கல்வி திட்டங்கள் அதிக அளவில் பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்ரா போன்ற கடன் திட்டம் போன்ற திட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பயனாளிகளாக உள்ளனர். ஒவ்வொரு மகளிர் சுய உதவிக் குழுவுக்கும் ரூ.20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் வகையில் மத்திய அரசு திட்டம் கொண்டு வந்துள்ளது.
பத்து கோடிக்கும் அதிகமாக கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் பெண்கள் முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி திட்டம் கொண்டு வருகிறார். தமிழகத்தில் கோடிக்கணக்கானோர் மத்திய அரசு திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். ஒவ்வொரு வார்டு, தொகுதி வாரியாக பயனடைந்த பெண்களிடம் நேரடியாக சென்று மத்திய அரசின் திட்டம் குறித்து, ஆயூஷ்மான் பாரத் திட்டம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 லட்சம் ரூபாய் காப்பீடு திட்டத்தில் பெரும் பங்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.
தமிழகத்தில் திராவிட அரசு கல்வி, தொழில் துறை அமைதி ஆகியவற்றை சிறப்பாக கையாண்டு வருவதாக கூறும் தமிழக அரசு பட்டியிலின மக்கள் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. பக்தியில் அதிக நாட்டம் கொண்ட பெண்கள் உள்ள மாநிலம் தமிழகம் .அயோத்தி ஸ்ரீ ராமர் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அச்சுறுத்தி பயமுறுத்தியும் கூட தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டு களித்துள்ளனர். சிறுபான்மை மக்கள் விழாவில் கலந்து கொள்ளும் திராவிட மாடல் அரசு நிலையை பெண்கள் மத்தியில் கொண்டு சேர்க்க உள்ளோம்.
பெண்கள் மூலமே நாடாளுமன்ற தேர்தலில் திராவிட மாடல் அரசுக்கு முடிவு கட்டுவோம். சமூக ஊடகங்கள் சிறப்பாக பணியாற்றி வரும் நிலையில் எத்தனை தனியார் இடங்களில் ராமர் நிகழ்ச்சி அனுமதி ரத்து செய்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். தனியார் இடங்களில் செய்யும் நிகழ்ச்சியை தடை போட இந்த அரசாங்கம் யார்?. திராவிட மாடல் அரசு இதேபோன்ற நிகழ்ச்சி சிறுபான்மை மக்களுக்கு நடத்த தயாரா?. சென்னிமலை கிறிஸ்துவ மலை என்று சொன்ன போது கூட இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற தனியார் மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கூடாது என்று கூறியுள்ளது.
தி.மு.க.வினர் விட்டால் மாநாட்டு தேதியில் தான் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வைத்துள்ளார்கள் என்று சொல்லி இருப்பார்கள். தமிழகத்தில் தான் அரசியலமைப்பு சட்டத்தின் படி அதிகாரமிக்க பொறுப்பில் உள்ளவர்களை தரக்குறைவாக நடத்துவது தான் திமுக தலைவர் ஸ்டாலின் நிலை. பா.ஜ.க.வில் தான் 33 சதவீதம் இடஒதுக்கீடு பெண்களுக்கு பின்பற்றப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வால் தான் நாட்டில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க பெற்றுள்ளது. மத்திய தேர்வு குழுவில் நான் உறுப்பினராக உள்ள நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்களே அதிக அளவில் வேட்பாளராக இருப்பார்கள்.
இப்போதைய சூழலில் கூட்டணி குறித்து பேச முடியவில்லை. வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அதனால் தேர்தல் பணிகளை செய்து வருகிறோம். ப.ரஞ்சித் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தீபம் ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் மட்டுமே வைத்துள்ளார். கேட்பவர்கள் கேட்கலாம் இல்லை என்றால் விட்டு விடலாம் அது அவர்கள் தனிப்பட்ட உரிமை. அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க வேண்டும் என்பது ஐநூறு ஆண்டு கால இந்துக்களின் நம்பிக்கை. இந்த கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. எந்த இடத்திலும் ராமர் கோவில் என்பது சட்டத்திற்கு புறம்பாக அமைக்கவில்லை. தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
ராமர் என்பவரை இந்திய நாட்டின் கலாச்சாரம் தேசிய புருஷராக தான் பார்க்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் மசூதி எந்த இடத்தில் இருந்தது என்பதை பார்க்க வேண்டும். ராமர் பிறந்த இடத்தில் தான் மசூதி கட்டப்பட்டது தான் என்பதை உதயநிதி உணர வேண்டும். தி.மு.க. மாநாட்டு கின்னஸ் சாதனை என்பது எவ்வளவு இருக்கைகள் போடப்பட்டது என்பதை கருத்தில் கொண்டு வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதை தவிர சமூக ஊடகங்களில் வந்த தி.மு.க. இளைஞர் அணி மாநாடு குறித்த புகைப்படங்களை பார்த்து இருப்பீர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 coment rios: