இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாநகராட்சி 1வது மண்டல அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, ஈரோடு மாநகராட்சி 1வது மண்டல தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் மாநகர நல அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையாளர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு கவுன்சிலர்களுடன் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
0 coment rios: