இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் எதிர்வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினம், 25ம் தேதி வள்ளலார் நினைவு தினம் மற்றும் 26ம் தேதி குடியரசு தினம் (26.01.2024) ஆகிய தினங்களை முன்னிட்டு மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, அந்த 3 நாள்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள், எப்எல்2 கிளப்கள் மற்றும் எப்எல்3 ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.
அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: