ஆனால், இந்த ஆர்ப் பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் இந்து மக்கள் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் செந்தில் உள்பட 20 பேரைக் கைது செய்து மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கயத்தில் இருந்து காரில் வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஈரோடு-பூந்துறை சாலை, கஸ்பாபேட்டை அருகில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்
0 coment rios: