ஈரோடு மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று அனைத்து மதுபான விற்பனை கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தடையை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஈரோடு டவுன் போலீசார் நடத்திய சோதனையில், ஈரோடு அகில்மேடு வீதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த மதுரை, காவக்கிணறு, கொத்தனார் வீதியை சேர்ந்த ரவி (வயது 55) என்பவரை கைது செய்தனர். இதே போல ஈரோடு தெற்கு போலீசார் நடத்திய சோதனையில், புதுக்கோட்டை மாவட்டம், மங்களம் பகுதியை சேர்ந்த சொர்ணாசேகர் (வயது 48), திண்டல், காரப்பாறை அல்லிமுத்து (வயது 55), தஞ்சாவூர், ஒரத்தநாடு ஆறுமுகம் (வயது 43), ஈரோடு வைராபாளையம், கணபதி நகர் சண்முகசுந்தரம் (வயது 53), புதுக்கோட்டை மாவட்டம், மரவமதுரையை சேர்ந்த முத்துகுமார் (வயது 38), ஈரோடு மூலப்பாளையம், பாரதி நகர் சந்தோஷ் (வயது 24), அந்தியூர் ஆலாம்பாளையம், நடுத்தெருவை சேர்ந்த அர்த்தணாரிசாமி (வயது 55), அந்தியூர் முதலியார் வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 42), நகலூர் பழனிசாமி (வயது 45) உள்பட 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
0 coment rios: