விழாவில், தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம்- ஒழுங்கு) ஏடிஜிபி அருண் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டதோடு, பொங்கல் வைத்தும் ரேக்ளா வாகனத்தில் தனது குடும்பத்துடன் பயணித்தும் மகிழ்ந்தார். தொடர்ந்து காவல்துறை குடும்பத்தினர் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மேலும், தமிழர்களின் பாரம்பரியமிக்க கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிப்புடி ஆட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலைகளை நடனமாடி அரங்கேற்றிய கலைஞர்கள் மற்றும் காவல்துறையினர், மகிழ்ச்சி பொங்க இந்நிகழ்ச்சியை கண்ட காவல்துறை குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், டிஎஸ்பிக்கள் ஆறுமுகம், கோகுலகிருஷ்ணன், தங்கவேல், சரவணன், அமிர்தவர்ஷினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.
0 coment rios: