இதையொட்டி, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி வாயிலாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு செய்திகள்| Latest Erode News & Live Updates: ஈரோடு மாவட்டத்தில் 10 புதிய திட்டப் பணிகளை திறந்த வைத்த முதல்வர்
ஈரோடு மாவட்டத்தில் , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி மற்றும் அந்தியூர், சிவகிரி, நம்பியூர், நசியனூர் ஆகிய பேரூராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட வாரச் சந்தை கூடங்கள், பெருந்துறை பேரூராட்சியில் புதிய நூலகத்துடன் கூடிய அறிவு சார் மையம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு தங்குமிடம், ஈரோடு மாநகராட்சி இளைஞர் மேம்பாட்டு மையம் மற்றும் மொடக்குறிச்சி, கொடுமுடி ஒன்றிய ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் என மொத்தம் ரூ.505.69 மதிப்பீட்டிலான 10 புதிய திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
0 coment rios: