ஈரோடு மாவட்டத்தில் 18 வட்டாசியர்களை திடீரென்று பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, ஈரோடு கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துகிருஷ்ணன் ஈரோடு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு வட்டாட்சியர் ஜெயகுமார் ஈரோடு முத்திரைத்தாள் தனி வட்டாட்சியராகவும், ஈரோடு முத்திரைத்தாள் தனி வட்டாட்சியர் கதிர்வேல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும்படை தனி வட்டாட்சியராகவும்,
பெருந்துறை சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அமுதா ஈரோடு கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், பவானி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜமுனாராணி பதவி உயர்வுடன் பெருந்துறை சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், கோபி குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் கார்த்திக் கோபி வட்டாட்சியராகவும், கோபி வட்டாட்சியர் உத்திரசாமி கோபி குடிமைப் பொருள் தனி வட்டாட்சியராகவும்,
ஈரோடு டாஸ்மாக் கிடங்கு மேலாளர் கவியரசு அந்தியூர் வட்டாட்சியராகவும், அந்தியூர் வட்டாட்சியர் பெரியசாமி கோபி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், கோபி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேஸ்வரன் தாளவாடி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும்,
ஈரோடு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பரிமளாதேவி ஈரோடு டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், பவானி தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சரவணன் பதவி உயர்வுடன் ஈரோடு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், நம்பியூர் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் துரைசாமி சத்தியமங்கலம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியராகவும், சத்தியமங்கலம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சந்திரசேகர் நம்பியூர் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும்,
ஈரோடு கோட்ட கலால் அலுவலர் குமரேசன் பவானி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும், பவானி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் வீரலட்சுமி ஈரோடு கோட்ட கலால் அலுவலராகவும், ஈரோடு ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் கணேசன் கோபி டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், கோபி டாஸ்மாக் கிடங்கு மேலாளர் கணேசன் ஈரோடு ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
0 coment rios: