இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவசமாக நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி நடை பெற உள்ளது. இப்பயிற்சியில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியானது வருகின்ற 19ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
பயிற்சியின் போது சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ள முடியும்.
வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், 100 நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கான முன்பதிவு செய்ய விரும்புவர்கள் 87783 23213, 72006 50604, 0424 - 2400338 ஆகிய எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு கனரா வங்கி,கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2ம் தளம், கொல்லம்பாளையம், ஈரோடு - 638002 என்ற முகவரியை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: