செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

ஈரோட்டில் வரலாறு காணாத அளவுக்கு பூண்டு விலை உயர்வு

தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை அதிகரித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஈரோடு வஉசி காய்கறி சந்தைக்கு தமிழகம்,கர்நாடக, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வருவதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.180க்கு விற்பனை செய்த பூண்டு தற்போது ரூ.400ஆக அதிகரித்து உள்ளது.

இதனால் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இதே போன்று சமையலில் மூலப்பொருட்களில் ஒன்றாக உள்ள பூண்டை ஏழை எளிய நடுத்தர மக்கள் வாங்க முடியாமல் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

ஆண்டில் சராசரியாக தக்காளி, வெங்காயம், பொருட்கள் விலை ஏற்றம் சந்தித்து வரும் நிலையில் தற்போது பூண்டு இஞ்சி போன்ற சிறு பொருட்கள் விலை ஏற்றமும் மக்களின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய சமையல் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: