நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 39வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார். பொதுவாகவே தமிழ் திரையுலகில் நடிகர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தினர் அவரது பிறந்த நாளை சற்றே வித்தியாசமான முறையில் பிறருக்கு பயனுள்ள வகையில் கொண்டாடி அசத்தியுள்ளனர்.
ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள கொங்கு அறிவாலயம் மன வளர்ச்சி குன்றியோர், தொழில் பயிற்சி கூடத்தில் கல்வி பயின்று வரும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை அவரது நற்பணி இயக்கத்தினர் கொண்டாடியுள்ளனர்.
அந்த தொழில் பயிற்சி கூடத்தில் குழந்தைக்கு இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதில், ஈரோடு மாவட்ட தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: