இதுகுறித்து ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்ட துணைத் தலைவர் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி வாசல், தர்காவிற்கு அளித்து வந்த மானிய தொகை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இஸ்லாமிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பள்ளி, கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய பெண்களுக்கு விடுதிகள் திறக்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தில் சேர்க்கப்படுவர்.
சிறுபான்மை மக்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி விட்டது. எனவே மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கல்வி உதவி தொகையினை 1 முதல் 8 ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவியர்களுக்கு தமிழக அரசு நிதி உதவியுடன் வக்ப் வாரியம் மூலம் வழங்கப்படும்மத சிறுபான்மையினருக்கு காலவரம்பு குறிப்பிட்டாமல் நிரந்தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசால் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படும் என எண்ணற்ற உதவிகளை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு சிறுபான்மை துறை மாவட்ட துணை தலைவர் பாஷாவின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: