அங்கு குழந்தையை பரிசோதித்த தலைமை மருத்துவர் ராகவேந்திரா குழந்தைக்கு வளர்சிதை மாற்றம் கல்லீரல் கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார். இந்த நோய் அந்த குழந்தைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை அறிந்த அவர் உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்.
.இதையொட்டி குழந்தையின் தந்தையிடம் இருந்து கல்லீரல் தானமாக பெறப்பட்டது. மருத்துவர் ராகவேந்திரா தலைமையிலான மருத்துவ குழுவினர் தன்விகா என்ற அந்த குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இப்போது குழந்தை மருத்துவர் கண்காணிப்பில் நலமாக உள்ளது .
இதுபற்றி குழந்தையின் தந்தை யோகநாதன் கூறும்போது, குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆன போது அவளது பிரச்சினையை நாங்கள் கண்டறிந்தோம் . இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் பல மருத்துவமனைகளில் குழந்தைக்கு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நோய் குணமாகவில்லை.
இறுதியில் பெங்களூரில் உள்ள நாராயணா ஹெல்த் மருத்துவமனைக்கு எங்களது குழந்தையை அழைத்து சென்றோம் .அங்குள்ள தலைமை மருத்துவர் ராகவேந்திரா குழந்தையை முழுமையாக பரிசோதனை செய்து எங்களது குழந்தைக்கு வளர்சிதை மாற்ற கல்லீரல் கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார்.
எனவே உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது .இந்த ஆபரேஷனுக்கு தமிழக அரசும் உதவி செய்தது. எனது கல்லீரலில் ஒரு பகுதியை குழந்தைக்கு தானமாக நான் வழங்கினேன். பல மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பிறகு எனது மகள் குணமடைந்து உள்ளார். மூன்று மாதத்துக்கு முன்பு எனது குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இப்போது கல்லீரல் தானம் செய்த நானும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட எனது குழந்தையும் நலமாக உள்ளோம். இந்த ஆபரேஷன் மூலம் எனது மகளுக்கு டாக்டர்கள் புதிய வாழ்க்கையை அளித்துள்ளனர் என்று கூறினார்.
இதுபற்றி மருத்துவர் ராகவேந்திரா வளர்ச்சிதை மாற்ற கல்லீரல் கோளாறு என்பது 10 லட்சம் பேருக்கு ஒருவருக்கு ஏற்படக்கூடியது .இந்த நோய் வந்த குழந்தைகள் கடுமையான வளர்ச்சிதை மாற்றம் மற்றும் அமிலத்தன்மை ஏற்பட்டு தொடர்ந்து வலிப்பு போன்ற சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தும். இந்த நோய் கண்டறியபட்டவுடன் குழந்தைக்கு உடனடியாக மாற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
குழந்தையின் தந்தையின் கல்லீரலில் ஒரு பகுதி ஆபரேசன் மூலம் எடுக்கப்பட்டு குழந்தைக்கு பொருத்தப்பட்டது. தமிழக மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் காப்பாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சேலம், கோவை, ஓசூர், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில், 2 குழந்தைகள் உள்பட சுமார் 10 பேருக்கு தமிழகத்தின் காப்பீட்டுத் திட்டம் மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காப்பீடு இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய 15 லட்சம் முதல் 22 லட்சம் ரூபாய் வரை செலவாகக்கூடும். நாராயணா ஹெல்த் மருத்துவமனை தேவைப்படுபவர்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதில் எப்போதும் உறுதியாக உள்ளது என்று கூறினார்.
0 coment rios: