தமிழக அரசின் பட்ஜெட்டை ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (ஈடிசியா) வரவேற்றுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்க செயலாளர் சுரேஷ் கூறியிருப்பதாவது:-
2024-25 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் தாக்கல் செய்து உள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு. நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு திறன் வழங்கிடும் வகையில் ஒரு தொழில் வளர் காப்பகம் (Incubation Hub) ஏற்படுத்தப்படும்.
இந்தியாவின் முதலாவது PM MITRA ஜவுளிப் பூங்கா கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சிப்காட் நிறுவனம் மூலம், சேலம் மாவட்டத்தில் 111 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வரும் பூங்கா மூலம் 8000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் 800 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் 120கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட உள்ள தொழிற் பூங்காவில் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல், தோல் அல்லாத காலணிகள் உள்ளிட்ட மாசு ஏற்படுத்தாத தொழில்கள் அமைக்க உரிய முயற்சிகள் எடுக்கப்படும்.
நெகிழிக் கழிவுகள் உள்ளிட்ட மக்காத குப்பைகள், கிராமப்புற சூழ்நிலைகளை மிகவும் பாதிப்பிற்கு உள்ளாக்குவதைத் தவிர்க்க, மக்காத குப்பைகளை முறையாகச் சேகரித்து மறுசுழற்சி செய்தல், தொழில் நிறுவனங்களின் எரிபொருள் பயன்பாட்டிற்கு வழங்குதல் போன்ற பணிகளைச் செயல்படுத்த தமிழ்நாட்டில் ஒரு புதிய நிறுவனம் ஏற்படுத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய அம்சங்கள் நிறைந்த பட்ஜெட்டை ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் வரவேற்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 coment rios: