ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வித்தியாசமான முறையில் குடுகுடுப்புகாரன் பொதுமக்களிடம் திமுகவிற்கு அதரவாக வாக்குகளை சேகரித்து வருகிறார்.
இன்னும் ஒரு மாதத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ள நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல்களம் சூடு பிடிக்க துவங்கி உள்ள இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக திமுகவினர் பல்வேறு கட்ட பிரச்சாரங்களை துவங்கி உள்ளனர்,
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியும், பாஜக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தயாராகி களத்தில் உள்ளனர்,
இதற்கான பல்வேறு கட்சிகளின் சார்பில் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டங்கள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட, அந்தந்த கட்சிகள் சார்பில் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது,
இதன் ஒரு பகுதியாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில், இந்தியா கூட்டணியின் சார்பில், போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக, ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வள்ளிபுரத்தான் பாளையம் கிராமத்தில் வித்தியாசமான முறையில் சேலம் கோவிந்தன் தலைமை கழக பேச்சாளர் வித்தியாசமான முறையில் குடுகுடுப்பு வேடமணிந்து அதிகாலை 4 மணி முதல் கைச்சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.
இதேபோல, ஈரோடு மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில், அந்தந்த கூட்டணிகளை சார்ந்த கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என இப்போது இருந்தே தேர்தல் பணியை துவங்கியுள்ளனர்.
0 coment rios: