ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணியை தமிழக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி பூர்வாங்க பணியினை துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம்,ன திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், ரூ.2 கோடியே 11 லட்சம் செலவில் ஐந்து நிலை கிழக்கு ராஜகோபுரம் நிர்மாணம் செய்து அடிக்கல் நாட்டியும், 93 லட்சம் ரூபாய் செலவில் பெருந்துறை அருகே உள்ள தங்கமேடு தம்பிகலை அய்யன் சுவாமி திருக்கோயில் பசுமடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டியும், இதே கோவிலில் 26 லட்சம் ரூபாய் செலவில் வணிக வளாக பணிகளை துவக்கி வைத்தும், 51 லட்ச ரூபாய் செலவில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் யானை நினைவு மண்டபம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டியும், 34.50 ரூபாய் செலவில் பணியாளர் மற்றும் செயல் அலுவலர் குடியிருப்பு மராமத்து பணிகளை துவக்கி வைத்தும், 60 லட்ச ரூபாய் செலவில், அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் மதில் சுவர் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டி, மொத்தம் 4 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை அடிக்கல் நாட்டியும் துவக்கி வைக்கும் விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு திருப்பணிகளை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் அந்தியூர் செல்வராசு, அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், மொடக்குறிச்சி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம், திமுக மாநில நிர்வாகிகள் சந்திரகுமார், பிரகாஷ், வீரமணி ஜெயகுமார், மாமன்ற உறுப்பினர் கோகிலவாணிமணிராசு,மற்றும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: