பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோடு சைபர் கிரைம் போலீசார் சார்பில், நடத்தப்பட்ட இப்பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி, பிரப்ரோடு வழியாக ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது. இதில், சைபர் கிரைம் போலீசார் மற்றும் திரளான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
0 coment rios: