ஈரோடு மாவட்டத்தில் இரவில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. அதே வேளையில் பகலில் வெயிலும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஈரோட்டில் 100 டிகிரி வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் இரவில் பனிப்பொழிவு கொஞ்சம் குறைந்து காணப்படுகிறது.
கோடைத் துவங்கும் முன்பே வெயில் அதிகரித்து வெளுத்து வாங்குவதால் பொதுமக்கள் மதிய வேளையில் சாலையில் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். ஈரோட்டில் இன்று (பிப்.19) 100.04 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது . கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைப்பதால் இனிவரும் காலத்திலும் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.
இந்த வெயிலால் வாகன ஓட்டிகள், தள்ளு வண்டி கடை உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் இளநீர், கூல்டிரிங் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக தர்ப்பூசணி, வெள்ளரி, இளநீர் போன்றவற்றையும், ஜூஸ் வகைகளையும் அதிகமாக விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
0 coment rios: