வியாழன், 7 மார்ச், 2024

அந்தியூர் ஒன்றியத்தில் ரூ.4.31 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில் அரசு துறைகளின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் வேம்பத்தி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், ரூ.45.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தினையும், வே.வெள்ளாளப்பாளையம் பகுதியில், ரூ.17.லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியினையும், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ.3.46 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் சீரமைப்பு செய்யப்பட்டு வரும் பணியினையும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, நபார்டு கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ.50.43 லட்சம் மதிப்பீட்டில் வே.வெள்ளாளப்பாளையம் முதல் ஓசைபட்டி வரை தார்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினையும், வே.வெள்ளாளப்பாளையம் ஓசைபட்டி சாலையில், கரட்டுப்பள்ளம் கிளை வாய்க்காலில் ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுப்பட்டு வரும் பணியினையும், குப்பாண்டாம்பாளையம் ஊராட்சியில், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ.54.75 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, அத்தாணி பேரூராட்சி, செம்புளிச்சாம்பாளையம் பகுதியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், ரூ.7.25 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி கட்டிடங்கள் சீரமைப்பு பணிகளையும், ரூ.4.67 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி கட்டிடம் மற்றும் கழிப்பறை கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு வரும் பணியினையும், அத்தாணி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.4.13 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேலும், அந்தியூர் பேருந்து நிலையத்தில், ரூ.91 லட்சம் மதிப்பீட்டில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பேருந்து நிறுத்தத்துடன் கூடிய கடைகள் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் என அந்தியூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மொத்தம் ரூ.4.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர்கள் தீபா, சிவபிரசாத், ராஜசேகர், அத்தாணி செயல் அலுலவர் ரமேஷ் குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: