மத்திய அரசு பத்திர நன்கொடைகளை பெற்றதில் உச்ச நீதி மன்றம் மார்ச் 6க்குள் வெளியிட கூறியதை காலம் கடத்தும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர்களான அல்டிமேட் தினேஷ், விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் ரவி கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட துணை தலைவர் பாபு என்கிற வெங்கடாசலம், புனிதன் பொதுச் செயலாளர் கனகராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன், தொழிலாளர் காங்கிரஸ் (டிசிடியு) மாநில துணைத்தலைவர் குளம் ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவர் பாஷா, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் மாரிமுத்து, மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவி தீபா,என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி கிருஷ்ணவேணி, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் முகமது அர்சத், மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
0 coment rios: