உலக மகளிர் தின விழா : சேலத்தில் போக்ஸோ சட்டம் குறித்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி....
சர்வதேச உலக மகளிர் தினம் விழா உலகம் எங்கும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மக்கள் சேவகன் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான சரசுராம் ரவி தலைமையில் நடைபெற்றது.
சேலம் அஸ்தம்பட்டி முனியப்பன் கோவில் அருகே தொடங்கிய இந்த பேரணியினை மக்கள் உரிமை இயக்க நிறுவன தலைவர் பிரின்ஸ் மற்றும் மக்கள் சமூக சேவை நல அமைப்பின் நிறுவனர் மோகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு துவக்கி வைத்த இந்த பேரணி, காந்தி ரோடு, வின்சென்ட், அம்பேத்கர் சிலை, வேலஸ்திர திரையரங்கம், திருவள்ளுவர் சிலை வழியாக கோட்டை மைதானத்தில் நிறைவு பெற்றது.
இந்த இரு சக்கர வாகன பேரணையின் போது, பெண்கள் மற்றும் பெண் சிறார் பாதுகாப்பு குறித்தும், போஸ்கோ சட்டம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த பேரணியில் மக்கள் சேவகன் சமூக நல அமைப்பின் சட்ட ஆலோசகர் சண்முகம் உட்பட 200 மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
சேலம். S.K.சுரேஷ்பாபு.
0 coment rios: