அதில், ஈரோடு இடையங்காட்டுவலசு சின்னமுத்து மெயின் வீதியில், பி.பெ.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த திமுக மாநகர பிரதிநிதி சேகர் (வயது 50) என்பவர், வெள்ளைத்தாளில் நம்பரை எழுதி லாட்டரி சீட்டு என விற்பனை செய்து வருவதாகவும், இதேபோல் தன்னிடமும் வெள்ளைத்தாளில் நம்பரை எழுதி கொடுத்து ஆசை வார்த்தை கூறியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த 8 வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.
0 coment rios: