தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது, மனித சங்கிலி போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட செயலாளருமான கே.வி. ராமலிங்கம் தலைமை தங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணியம், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கே.சி. பழனிச்சாமி, கேசவமூர்த்தி, ஜெகதீஷ், கோவிந்தராஜன், பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஈகிள் கே. சதீஷ்குமார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் மாதையன், ஒன்றிய செயலாளர் ஏ கே பழனிச்சாமி, வக்கீல் அணி மாவட்ட இணைச் செயலாளர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன் ராஜா, மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் பொன் சேர்மன், மாவட்ட மாணவரணி செயலாளர் ரத்தன் பிரித்வி,
மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு தனியார் அண்ணா மின் அமைப்பு மாநில தலைவர் மின்மணி, கவுன்சிலர் செந்தில்குமார், முருகானந்தம்,
அண்ணா தொழிற்சங்க மாணவர் மாவட்ட துணை செயலாளர் ஆட்டோ சண்முகசுந்தரம், சூரிய சேகர், பிரதிநிதி கஸ்தூரி, சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மனித சங்கிலியானது ஈரோடு பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, ஜி.எச்.ரவுண்டானா, மீனாட்சி சுந்தரம் சாலை முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை சாலையின் ஒரு புறத்தில் அ.தி.மு.க.வினர் கைகோர்த்தபடி நீண்ட வரிசையில் நின்று கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
0 coment rios: