ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், போலியோ சொட்டு மருந்து தினத்தினை முன்னிட்டு, நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
அப்போது , அவர் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் இன்று (3ம் தேதி) போலியோ சொட்டு மருந்து தினத்தினை முன்னிட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் சார்பில், 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், துணை சுகாதார மையங்கள், துணை சுகாதார நலவாழ்வு மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உட்பட 1, 412 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 5,391 பணியாளர்களை கொண்டு 61 அரசு வாகனங்கள் மூலம் 1.76 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
ஆகவே, ஈரோடு மாவட்ட பொதுமக்கள், பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் வசிப்பிட பகுதிக்கு அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அணுகி இரண்டு சொட்டு போலியோ சொட்டு மருந்தை வழங்கி தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமாக வளர்த்திட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இம்முகாமில், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், இணை இயக்குநர் (நலப்பணிகள்) (பொ) செந்தில்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம், மாநகர நல அலுவலர் பிரகாஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கோதை, மருத்துவ கண்காணிப்பாளர் சசிரேகா, உறைவிட மருத்துவர் கவிதா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: