இதற்கிடையில், வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்ற நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் மு.கார்மேகன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கராவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், வழக்கறிஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் அபிசேக், உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர், மகேஸ்வரி, மண்டல செயலாளர் நவநீதன் ஆகிய 4 பேர் உடன் இருந்தனர்.
0 coment rios: