இந்த விழா ஈரோடு சுல்தான்பேட்டை பள்ளிவாசல் அருகில் மாவட்ட தலைவர் ஜனாப் எஸ்.ஏ.அஸ்கர் அலி தலைமையில் நடைபெற்றது. விழாவில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முஹம்மது ஆரிப் வரவேற்புரை ஆற்றினார். மாநில கௌரவ ஆலோசகர் அல்ஹாஜ் இ.கே.எம்.முஹம்மது தாஜ் முகைதீன் பிறைக்கொடி ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
அதன் பின்னர் காமராஜர் ஹை-ஸ்கூல் ரோட்டில் உள்ள காயிதே மில்லத் சென்டர் அலுவலகத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட, பிரைமரி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதியில் மாவட்ட பொருளாளர் இ.கே.எம்.முஹம்மது கலீல் நன்றி கூறினார்.
0 coment rios: