சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது.
இந்நிலையில், தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மெட்டல்வாடி பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, வாழை தென்னை,மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேரிய 3 காட்டு யானைகள் விவசாயி பங்காரு ( 48) என்பவர் தோத்தில் புகுந்து தக்காளி, வாழையை சேதாரம் செய்தது. இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகள் உதவியுடன் யானையை விரட்டினர் சுமார் 3 மணிநேர போராட்டத்திக்கு பிறகு 1 மணியளவில் யானையை வனப்பகுதிகுள் விரட்டி அடித்தனர்.
தொடர்ந்து யானைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து நாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.யானையால் 1/2 ஏக்கர் தக்காளி, 200 வாழைகள் சேதாரம் ஆனாது. யானையை வனப்பகுதி விரட்ட வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 coment rios: