சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அம்மாபேட்டை ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி RAZZMATZZ 2024 என்ற தலைப்பில் 19-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்... திரைப்பட நடிகை பவ்ய திரிகா பங்கேற்று மாணவிகளுடன் உற்சாக நடனம்.
கல்லூரியின் முதல்வர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கல்லூரியின் செயலாளர் விஜய் கணேஷ், பொருளாளர் செந்தில் குமார் மற்றும் கல்லூரியின் முதல்வர் விமலாதித்தன் மற்றும் தங்கவேல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை பவ்ய திரிகா மற்றும் யூடியூப் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
விழாவில் கல்லூரி மாணவ மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக தனிநபர் நடனம் குழு நடனம் மற்றும் குரு நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு விருந்தினர் இருவரும் கல்லூரி மாணவ மாணவிகளுடன் நடனமாடி நகைச்சுவையாக பேசியும் விழாவினை சிறப்பித்தனர். மேலும் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
0 coment rios: