S.K. சுரேஷ்பாபு.
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு
தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில்
விழிப்புணர்வு மனித சங்கிலி,
மார்ச் :16 சேலம் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மற்றும் சண்முகா
கல்வி நிறுவன குழும நர்சிங் கல்லூரியின் மாணவியர்கள் இணைந்து உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் நடைபெற்றது.
இதனை சேலம் இந்திய மருத்துவ சங்க தலைவர் மருத்துவர் சாது பகத்சிங், செயலாளர் மருத்துவர் AS குமார் அவர்கள் மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் அஸ்வின் ஷெஹி தொடங்கிவைத்தார்கள். இது குறித்து தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவர் அஸ்வின் ஷெஹி கூறியதாவது "2013 ஆம் ஆண்டில், உலகளவில் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.3 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2020 ஆம் ஆண்டில் 80.0 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது, 2040 இல் 111.8 மில்லியனாகவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதில் 2.1 மில்லியன் மக்கள் குளுக்கோமாவால் கண் பார்வை இழந்து உள்ளார்கள்.40 வயதிற்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் இந்தியர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு இந்தநோயால் 12.8 சதவீதம் கண்பார்வையை இழக்க வாய்ப்புள்ளது.இந்தநோயால் பாதிக்கப்பட்ட 90% மேற்பட்டோருக்கு, இந்நோய்பற்றி தெரிவதில்லை,ஆரம்ப நிலையில் இந்நோய் உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வை பறிபோவதை தடுக்கலாம் இந்தநோயால் 40வயதிற்கு மேற்பட்டோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் 40வயதிற்கு மேற்பட்டோர் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்வது அவசியம், சேலம் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை பொதுமக்களின் கண் நலனுக்காக மார்ச் மாதம் முழுவதும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படும் ,சேலத்தில் முதன்முறையாக பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடியா ஸ்மைல் மற்றும் ரோபெடிக்(LRCS) கண்புரை அறுவை சிகிச்சை சேலம் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் மட்டுமே செய்யபடுகிறது" என்றார்..
இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி சேலம் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை விழித்திரை மருத்துவர் சுரேஷ்பாபு, மருத்துவர்கள் ராஜஸ்ரீ, ஆண்ட்ரியோ ஜோஸ் மேனேஜர் செந்தில்,மார்க்கெட்டிங் மேனேஜர் கோவிந்தசாமி மற்றும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஊழியர்கள் சண்முகா கல்வி நிறுவன குழும நர்சிங் கல்லூரியின் முதல்வர் அன்னம் மற்றும் 200க்கு மேற்பட்டோர் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: