ஈரோடு மாவட்டம், கோபி அருகே அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .
கோபி அருகே கவுந்தப்பாடி பாவாண்டகவுண்டனூரில் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலில் 18ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமி தீர்த்தக் குட விழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக அங்காளம்மன் அம்மன் அழைத்தல் திருவீதி உலா நடைபெற்றது .
அதன் பின் கவுந்தப்பாடி பவானி ரோட்டில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் இருந்து காலை 6 மணி அளவில் தீர்த்தக் கூட ஊர்வலம் நடைபெற்றது. இந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களும் மஞ்சள் ஆடை அணிந்து தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். இந்த ஊர்வலம் கவுந்தப்பாடி சந்தை திடல் வழியாக பஸ் நிலையம் , கவுந்தப்பாடி நால்ரோடு, கோபி மெயின் ரோடு வழியாக சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு தீர்த்த குடம் , பால்குடம் , பன்னீர் குடம் , அக்னி சட்டி ஏந்தியபடி ஊர்வலமாக மேளதாளம் முழங்க, வான வேடிக்கையுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுடன் கோவில் சன்னதியை ஊர்வலம் வந்தடைந்தது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆங்காங்கே மோர், மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. இந்த ஊர்வலம் கவுந்தப்பாடி அருகே உள்ள பாவாண்டா கவுண்டனூரில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தைச் சென்று அடைந்தவுடன் அங்கு அம்மன் முன் தீர்த்த குடங்கள் வைக்கப்பட்டு அபிஷேகம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ அங்காளம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க கவச அலங்காரத்துடன் தீபாராதனை செய்து ஸ்ரீ அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .
முன்னதாக அதிகாலை ஸ்ரீ அங்காளம்மன் புதிய உற்சவருக்கு ஹோம பிரதிஷ்டை நடைபெற்றது .
கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
0 coment rios: