சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா.... கல்லூரி மாணவ மாணவிகள் உற்சாகம்.
சேலம் அம்மாபேட்டை ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அந்த கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் செயலாளர் விஜய கணேஷ், பொருளாளர் செந்தில் குமார், கல்லூரியின் முதல்வர் முனைவர் விமலாதித்தன், ஸ்ரீ கணேஷ் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் குமார், தங்கவேல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில்h பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறை கண்ட்ரோலர் முனைவர் கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெரியார் பல்கலைக்க தேர்வில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்று ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினரின் சிறப்புரை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஊக்கமடிக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: