மக்களவை தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு திமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இது குறித்து அவரிடம் கேட்டபோது,
"பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சியில் பல்வேறு காரணிகளில் பின்னடைவை சந்தித்த தமிழ்நாட்டை தனது சீரிய முயற்சியாலும், தொலைநோக்கு திட்டங்களாலும் மீண்டும் முன்னணி மாநிலமாக மாற்றிய பெருமை மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களையே சேரும். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. அந்த வரவேற்பு தான் எங்களை உற்சாகமாக தேர்தல் பணியாற்ற வைக்கிறது.
உதாரணத்திற்கு மகளிர் இலவச பேருந்து திட்டமான விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்பு, பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் என அனைத்துமே மக்களின் அன்றாட வாழ்வை மேம்படுத்தி அவர்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லக்கூடிய திட்டங்கள். இதனால் பயன்பெற்ற பயனாளிகளின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி தான் இந்த ஆட்சியின் சாதனை.
ஆனால், தற்பெருமைக்காக சில ஆயிரங்களை செலவு செய்து விளம்பர பேனர்கள் வைத்து மக்களை ஏமாற்றுபவர் தான் தற்போதைய ஈரோடு அதிமுக வேட்பாளர்.கழக ஆட்சி போன்று அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ஒன்றையாவது சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்களின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும், பாஜக கொண்டு வரும் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கவும் தான் ஆட்சி செய்தனர். சொத்துமதிப்பில் தமிழ்நாட்டிலேயே முன்னணி வேட்பாளரான அசோக் குமார் அவர்கள் பணத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறார் என முன்பிருந்தே கூறி வருகிறேன். அதற்கான சாட்சி சமீபத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள், பல லட்சம் சேலைகள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து வழக்கும் பதிவு செய்திருப்பது.
நேற்று வரை அவர் அங்கம் வகித்த பாஜகவும் மக்கள் திட்டங்களை பற்றி சிந்தித்ததில்லை, தற்போது அவர் தற்காலிகமாக அங்கம் வகிக்கும் அதிமுகவும் மக்கள் திட்டங்களை செயல்படுத்தியதில்லை. ஆனால், இந்தியாவிற்கே முன்மாதிரியான அரசு நமது திராவிட மாடல் அரசு. கனடா உள்ளிட்ட வெளிநாடுகளும் கழக அரசின் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை அங்கே செயல்படுத்தி உள்ளனர். எனவே, அதிமுக வேட்பாளரின் உடன் இருப்பவர்கள் இந்த நடப்பு செய்திகளையெல்லாம் அவருக்கு தெரியப்படுத்தவும். போகிற போக்கில் புள்ளி விவரம் இல்லாமல் தான் அங்கம் வகித்த பாஜக, தற்போது அங்கம் வகிக்கும் அதிமுக ஆகியவற்றின் வழக்கத்தை பிரதிபலிப்பது போன்று வாய்க்கு வந்ததை பேசிகொண்டிருக்கிறார்.
எனவே, இவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மக்கள் கழக ஆட்சியின் சாதனைகளை மனதில் கொண்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியினை எங்களுக்கு பரிசாக அளிப்பார்கள். "
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 coment rios: