திங்கள், 8 ஏப்ரல், 2024

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சகாயபுரம், குமாரபாளையம், கொல்லன்வலசு, தம்பிரான் வலசு, காந்திநகர், அண்ணாநகர், பச்சாக்கவுண்டன்வலசு, நத்தமேட்டூர், கருக்காம்பாளையம், ஊஞ்சக்காட்டுவலசு, அம்பேத்கர்நகர், காரவலசு, நடுப்பாளையம், வேட்டுவபாளையம், கவுண்டம்பாளையம், நல்லசெல்லிபாளையம், பெரும்பரப்பு, முத்தையன்வலசு, கள்ளுக்கடைமேடு, கோட்டை காட்டுவலசு, இச்சிபாளையம், கொளநல்லி, சத்திரம்பட்டி, கரட்டுப்பாளையம், எல்லையூர், சாலைப்புதூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இன்று (திங்கட்கிழமை) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்களிடம் பேசியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமல்லாது சொல்ல திட்டங்களையும் நிறைவேற்றி மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகின்றது. இதே போல நடைபெற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கொடுமுடி பகுதியானது விவசாயத்தை அடிப்படையாக கொண்டதாகும். பயிர் சேதத்திற்கு 30 நாட்களில் இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் விவசாய பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்படும். விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷன் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்படும். இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல மருத்துவக்கல்லூரியும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். கொடுமுடியில் விவசாய தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி விவசாய தொழிலாளர்களுக்கான 100 நாள் வேலை திட்ட சம்பளம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். மானிய விலையில் உணவு வழங்கும் இந்திரா கேன்டீன்கள் திறக்கப்படும். காலிங்கராயன் வாய்க்காலில் முழுமையாக காங்கிரீட் தளம் அமைப்பதோடு, தேவையான இடத்தில் பேபி கால்வாய் வெட்டப்பட்டு கழிவு நீர் கலக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்து இதுவரை கிடைக்காத தகுதி உள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இந்த தேர்தலில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.

வாக்கு சேகரிப்பின் போது, திமுக நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: