அப்போது கடையில் பொருட்கள் சிதறி கிடந்தன. கடையில் இருந்த விலை உயர்ந்த 56 ஸ்மார்ட் செல்போன்கள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதுபோல் கல்லாப்பெட்டியும் திறந்து கிடந்தது. அதிலிருந்த பணம் ரூ.15,000 திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடையின் பின்பகுதியில் உள்ள தகர சீட்டை உடைத்து மர்ம நபர்கள் செல்போன் கடைக்கு வந்து விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது. திருட்டு போன செல்போன்களின் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும்.
இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
0 coment rios: