புதன், 1 மே, 2024

ஈரோடு அட்வகேட் அசோசியேஷன்: புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு


ஈரோடு அட்வகேட் அசோசியேசன் 2024- 25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஈரோடு சம்பத் நகர் ஐஎம்ஏ ஹாலில் நடைபெற்றது .
 அதன்படி சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய  தலைவராக  பி.பி.துரைசாமி, செயலாளராக கே.எஸ்.சண்முகசுந்தரம், பொருளாளராக  அருண்   கணேஷ், துணைத் தலைவராக  எல்.பாலசுப்பிரமணியம் , இணைச் செயலாளராக என்.குமரேசன் ,   நூலகராக பி.கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்களாக ஏ.சுந்தரம், எம்.சரவணன்,  சி.முத்துகுமார், எம்.தன்ராஜ், பி.தனசேகரன்,  பி.மகேஸ்வரி, கே.நவமணி , பி.யசோதா, எம்.வேல்முருகன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
 சங்கத்தின் முன்னாள் தலைவர் ஈஸ்வரமூர்த்தி  தனது பொறுப்பை புதிய தலைவர் பி.பி.துரைசாமி இடம் ஒப்படைத்தார். பதவியேற்ற புதிய  நிர்வாகிகளுக்கு  ஈரோடு மாவட்ட மூத்த வழக்கறிஞரும் , கொங்கு  கல்வி நிறுவனங்களின்  மூத்த அறக்கட்டளை உறுப்பினருமான பி.சி. பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி , சண்முகம் , நவநீதகிருஷ்ணன், நல்லசிவம், பாலசுப்ரமணியம் , சங்கத்தின் முன்னாள் தலைவர்  தாடி  என். சரவணன், முன்னாள் செயலாளர்  முருகானந்தம்  உள்பட  வழக்கறிஞர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர் .

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: