ஓய்வுபெற்ற தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியருக்கு
மாட்டு வண்டி ஊர்வலத்துடன்
வழியனுப்பு விழா
கோபி அருகே உள்ள கோபிபாளையம் என்ற கிராமத்தில் செயல்பட்டுவரும் தூய திரேசாள் அரசு நிதியுதவி் பெறும் தொடக்கப் பள்ளியில்
கடந்த 33 ஆண்டுகளாக தலைமையாசிரியராகப் பணியாற்றியவர் அரசு தாமசு
இவர் இன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு பள்ளியின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் வழியனுப்பு நிகழ்வு நடைபெற்றது
இந்த விழாவில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அரசு தாமசை பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பத்துக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் ஊர்வலமாக அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
கோபிபாளையம் கிராமத்திலிருந்து பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியரை மாட்டுவண்டியில் அமர்ந்து ஊர்வலமாக
அவரது இல்லம் சென்று வழியனுப்பி வைத்தனர்.
தங்கள் கிராமத்தில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு ஊர் பொதுமக்களும் உடன் பணிபுரிந்த ஆசிரியர்களும் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்த காட்சியை கோபி பகுதியை சேர்ந்த மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.
0 coment rios: