கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா ஜூன் 6 முதல் சிறப்பாக மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படும். தெற்கு மாவட்ட பகுதியில் சுமார் இரண்டு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். தேர்தல் முடிவுகள் நான்காம் தேதி வர உள்ளன. எனவே வழக்கம் போல் கலைஞர் பிறந்த நாளான மூன்றாம் தேதி கட்சியினர் வழக்கம் போல் கலைஞர் படத்தை வைத்து மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும்.
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். வட இந்தியாவில் பிரதமர் மோடியின் பேச்சால் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். ஆட்சிக்கு வரும். கூட்டணி உருவாக்க காரணமாக இருந்தவர் நமது முதல்வர். கூட்டணி கட்சியின் பல பிரச்சினைகளை பேசி தீர்த்தவர். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திலும், கடுமையாக உழைத்தவர். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு முதல்வர் ஈரோட்டுக்கு வர உள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிந்து விட்டது என்று நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது. அடுத்து உள்ளாட்சி தேர்தலும், கூட்டுறவு சங்க தேர்தலும் விரைவில் வர உள்ளன. அதற்கு நாம் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மாநகர திமுக செயலாளர் மு.சுப்ரமணியம், வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: