வெள்ளி, 31 மே, 2024

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தை கடன் தவனை செலுத்தவில்லை எனக்கூறி தனியார் வங்கி ஊழியர்கள் வாகனத்தை பறிமுதல்:வங்கி முன்பு இளைஞர் கதறல்..!

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தை கடன் தவனை செலுத்தவில்லை எனக்கூறி தனியார் வங்கி ஊழியர்கள் வாகனத்தை பறிமுதல்:வங்கி முன்பு இளைஞர் கதறல்..!

ஈரோடு அருகே மோளகவுண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் இவரது மகன் தரணிதரன் என்பவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீரப்பன்சத்திரத்தில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் 5ஆயிரம் ரூபாய் முன் பணம் செலுத்தி தனியார் வங்கி கடனுதவி மூலம் 98ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை (Dio scooter) வாங்கியுள்ளார்.

இதையடுத்து மாதம் 3800ரூபாய் 3வருடத்திற்கு என்ற அடிப்படையில் முதல் மாத தவனை தொகை செலுத்தினர்.இதையடுத்து மகன் தரணிதரனுக்கு உடல் நலம் பாதிப்பு காரணமாக வாகனத்திற்கான தவனை தொகை கடந்த இரண்டு மாதங்களாக செலுத்த முடியாத நிலையில் இருந்தது.இதன் பின்னர் கடன் தவனை செலுத்த தவறியதாக கூறி வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தை வங்கி ஊழியர்கள் சார்பில் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர்.இந்நிலையில் இரண்டு மாத தவனை தொகை செலுத்த மகன் தரணிதரன்,தாய் ராணியுடன் தீபா சென்ற நிலையில் வங்கி ஊழியர்கள் வாகனத்தை தர முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.இதையடுத்து மகன் தரணிதரன் வங்கி முன்பு வாகனத்தை தரக்கோரி கண்ணீர் விட்டு கதறிகதறி அழுதார்.மேலும் வாகனத்தின் மீது கொண்ட ஆசையால் ஆசை ஆசையாக வாங்கிய வாகனம் வேண்டும் என கூறி வங்கி முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.அப்போது வங்கி ஊழியர்களிடம் மகனின் உடல்நலம் பாதிப்பு குறித்து எடுத்துக் கூறியும் கேட்கவில்லை எனவும் தற்போது தவனை தொகை கட்ட வந்த நிலையில் வெளியே தள்ளி விடுவதாகவும் புகார் கூறினார்.இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு மருத்துவமனை போலீசார் வங்கி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடன் தவனை செலுத்த கால அவகாசம் பெற்று தந்ததுடன் வாகனத்தை திருப்பி வழங்குமாறு அறிவுறுத்தினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: